பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? |

பாக்கியலெட்சுமி தொடரில் கோபியின் தாயார் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராஜலெட்சுமி. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல படங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் குணச்சித்ர வேடங்களில் பரவலாக நடித்து வருகிறார். இவருக்கு ரோஹித் என்ற மகன் இருக்கிறார். அவர் தற்போது தெலுங்கில் 'பல்லக்கோட்டிக்கி பண்டகே ஒச்சிந்தி' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.
இந்த படத்தின் காட்சியை செலிபிரேட்டி ஷோவில் பாக்கியலெட்சுமி தொடரில் நடித்து வரும் பிரபலங்கள் இணைந்து பார்த்துள்ளனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட கம்பம் மீனா செல்லமுத்து ரோஹித்தின் திரைப்பயணம் வெற்றி பெற வாழ்த்துகள் கூறி பதிவிட்டுள்ளார்.