துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தமிழில் 'மூனே மூணு வார்த்தை, கவண்' போன்ற படங்களில் நடித்தவர் தர்ஷனா ராஜேந்திரன். தற்போது மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அதேப்போல் கனா, துணிவு போன்ற படங்களில் நடித்தவர் தர்ஷன்.
தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்கள். எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'பூக்குழி' நாவலை தழுவி இந்த படம் உருவாகிறது. 'சேத்துமான்' படத்தை இயக்கிய தமிழ், இயக்குகிறார். எஸ்.வினோத் குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தீபக் ஒளிப்பதிவு செய்கிறார். பிந்து மாலினி, வேதாந்த் பரத்வாஜ் இசை அமைக்கின்றனர்.
படம் பற்றி இயக்குநர் தமிழ் கூறும்போது, “ பெருமாள் முருகனின் இந்த நாவல் என்னைப் பாதித்ததால் படமாக்க முடிவு செய்தேன். தர்மபுரி பகுதியில் நடந்து வரும் சாதிய அரசியல்தான் கதைக்களம். நாவலை அப்படியே படமாக்காமல் சினிமாவுக்காக சில மாறுதல்களை செய்திருக்கிறேன். நட்சத்திர அந்தஸ்து இல்லாமல் இயல்பான நடிகை ஒருவர் தேவைப்பட்டார் அதற்காகவே தர்ஷனா ராஜேந்திரனை தேர்வு செய்தோம்" என்றார்.