வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

சென்னை மழை வெள்ளம் முடிவுக்கு வந்தாலும் 'பருத்திவீரன்' பட விவகாரம் முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டே போகிறது. அமீர் அளித்த சில பேட்டிகள், தயாரிப்பாளர் ஞானவேல் அளித்த பேட்டி, தயாரிப்பாளர் சங்க முன்னாள் செயலாளர் சிவசக்தி பாண்டியன் அளித்த போட்டி, அமீர் தந்த அறிக்கை என தற்போது வரையிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அமீர் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்து வரும் நிலையில் சூர்யா குடும்பத்தினர் கடும் வெறுப்பில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவர்கள் தரப்பிலிருந்து இனி அமீர் பற்றி எதுவுமே பேசாமல், அவருடன் எந்தவிதமான தொடர்பும் வைக்காமல் இருப்பதே நல்லது என முடிவெடுத்துள்ளதாகத் திரையுலகில் தெரிவிக்கிறார்கள்.
அதனால், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக உள்ள 'வாடிவாசல்' படத்தில் சூர்யா தொடர்ந்து நடிப்பாரா இல்லையா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அப்படத்தின் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பதை இயக்குனர் வெற்றிமாறன் தரப்பு சமீபத்தில் கூட உறுதி செய்தது. ஆனால், அமீர் நடிப்பதாக இருந்தால் அதில் சூர்யா நடிக்க விரும்ப மாட்டார் என்றே தெரிகிறது.
அதே சமயம் வெற்றிமாறன், சூர்யா கூட்டணி என்பதால் அந்தப் படத்திற்கான சில வியாபாரம் ஏற்கெனவே முடிந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். அதனால், சூர்யா நடிக்காமல் போனால் படத்தின் தயாரிப்பாளர் தாணு சிக்கலை சந்திக்க நேரும். அமீருக்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும் வெற்றிமாறன் அமீர் பக்கமே இருப்பார் என்கிறார்கள்.
வெற்றிமாறன் அமீரை படத்திலிருந்து நீக்க வேண்டும் அல்லது, அமீரே தானாக படத்திலிருந்து விலக வேண்டும். இதில் ஏதாவது ஒன்று நடந்தால்தான் 'வாடிவாசல்' படத்தில் சூர்யா நடிக்கலாம் என்ற நிலைதான் தற்போது உள்ளது என்று கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
வாடிவாசலுக்கு என்ன வழி கிடைக்கும் என்பது உடனடியாகத் தெரிய வாய்ப்பில்லை. சூர்யாவின் 'கங்குவா' படம் முடியும் போதுதான் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியும்.




