அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் பட அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது | ராஜ்குமார் பெரியசாமி படத்திற்காக ஸ்டைலிஷாக மாறும் தனுஷ் | ரசிகர்களை வீட்டு வாசலுக்கே வந்து வரவேற்று அழைத்துச் சென்ற பிரபாஸ் | விஜய், பிரபாஸை ஓவர்டேக் செய்த சாரா அர்ஜுன் | கலைக்கல்லூரியில் டாக்டர்களை தேடிய ஸ்ரீலீலா | பொங்கலுக்கு வருகிறது திரவுபதி 2 | ஆஸ்கருக்கு தேர்வான ‛டூரிஸ்ட் பேமிலி, காந்தாரா சாப்டர் 1, மகாவதார் நரசிம்மா' | ‛பராசக்தி'க்கு போட்டியாக ‛மஹாசக்தி' | மீண்டும் ஆயிரம் கோடி வசூலை எட்டுவாரா பிரபாஸ் | ‛பராசக்தி'க்கு யுஏ சான்று : நாளை படம் ரிலீஸ் |

முன்னணி நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் உள்ளிட்ட 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான திலீப் நடிகையும், தனது முன்னாள் மனைவியுமான மஞ்சு வாரியரின் தூண்டுதலின் பெயரில் தன்னை சுற்றி சதிவலை பின்னப்பட்டதாக குறிப்பிட்டார்.
இதுகுறித்து மஞ்சுவாரியர் நேற்று கொச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகை பாலியல் வழக்கில் குற்றம் செய்தவர்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. அவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், அந்த செயலை திட்டமிட்டு செய்தவர்கள் சுதந்திரமாக வெளியே நடமாடி வருகின்றனர். உரிய நீதி கிடைக்கவில்லை. எனவே, சதி திட்டம் தீட்டி நிறைவேற்றியவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் உண்மையான நீதி நிலைநாட்டப்படும். என்றார்.
பின்னர் அவர் வெளியிட்ட இன்ஸ்ட்ராகிராம் பதிவில் "மரியாதைக்குரிய நீதிமன்றத்தை நான் மதிக்கிறேன். ஆனால் இந்த விஷயத்தில் முழுமையாக நீதி கிடைக்கவில்லை. ஏனென்றால் குற்றம் செய்தவர்கள் மட்டுமே இப்போது தண்டிக்கப்பட்டுள்ளனர். இதைத் திட்டமிட்டவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்பது ஒரு பயமுறுத்தும் உண்மை. அவர்கள் தண்டிக்கப்படும்போதுதான் உயிர்வாழ்வதற்கான நீதி முழுமையடையும்.
இது நான் உட்பட சமூகத்தின், காவல்துறை மற்றும் சட்ட அமைப்பின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும். இது அவளுக்கு மட்டுமல்ல. இது இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும், ஒவ்வொரு மனிதனுக்கும் உரியது. பணியிடத்திலும், தெருக்களிலும், வாழ்க்கையிலும் பயமின்றி தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய சூழ்நிலை அவர்களுக்கு இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.