சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

மலையாள திரையுலகில் வில்லன், குணச்சித்திர மற்றும் கதையின் நாயகன் என மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தமிழில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் வில்லன்களில் ஒருவராக கொஞ்ச நேரமே வந்து போகும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படம் வெளியான சமயத்தில் அதில் விஜய்யின் நடிப்பு, பல காட்சிகளில் அவரது ரியாக்ஷன் ஆகியவை குறித்து விமர்சித்ததோடு, தன்னை அந்தப்படத்தில் மோசமாக காட்டியதற்காக இயக்குனர் நெல்சன் மீது விமர்சனங்களையும் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பிறகு அதற்காக வருத்தம் தெரிவித்தும் பேட்டி கொடுத்தார்.
திரையுலகில் நடிகர்களின் சம்பள விஷயத்தில் பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது என்பது குறித்து அவ்வபோது பேசி வருகிறார் ஷைன் டாம் சாக்கோ. அதேபோல சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் மீண்டும் இந்த சம்பள விவகாரம் குறித்து கூறும்போது, ''இங்கே ஒரு நடிகருக்கான சம்பளம் என்பது அவர் ஆணா பெண்ணா என்பதை பொருத்தோ, அவரது நடிப்புத் திறமையை பொருத்தோ கொடுக்கப்படுவதில்லை. யார் அதிக கூட்டத்தை தியேட்டருக்கு இழுக்கிறார்களோ, யார் சூப்பர்ஸ்டார் என்கிற அந்தஸ்த்தில் வருவார்களோ அவர்களுக்கு மட்டும்தான் அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது.
விஜய் அதிக சம்பளம் வாங்குகிறார் என்பதால் அவர் மம்முட்டி, மோகன்லாலை விட சிறந்த நடிகரா? எதற்காக மோகன்லால், மம்முட்டி, கமல்ஹாசன் போன்ற சிறந்த நடிகர்களுக்கு சம்பளம் குறைவாக கொடுக்கப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும்'' எனக் கூறியுள்ளார். அவரது இந்த கருத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்தாலும் தேவையில்லாமல் விஜய் பற்றி எதற்காக பேசுகிறீர்கள் என இன்னொரு பக்கம் அவருக்கு கண்டனங்களும் குவிகின்றன.