கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் |

பிரபல பரதநாட்டிய கலைஞர் பிரீத்தி முகுந்தன். மாடல் அழகியாகவும் இருக்கிறார். விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். ஏராளமான இசை ஆல்பங்களில் ஆடியுள்ளார். தற்போது பான் இந்தியா படமாக தயாராகி வரும் 'கண்ணப்பா' படத்தின் மூலம் நடிகை ஆகிறார். இந்த படத்தை மோகன் பாபு தயாரிக்கிறார். ஷால்டன் ஷாகு ஒளிப்பதிவு செய்கிறார், மணிசர்மா, ஸ்டீபன் தேவாசே இசை அமைக்கிறார்கள். 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.
கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகும் இந்த புராண படத்தில் மோகன்லால், பிரபாஸ் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். கண்ணப்ப நாயனாராக விஷ்ணு மஞ்சு நடிக்கிறார். சரத்குமார், ஐஸ்வர்யா பாஸ்கரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் பிரீத்தி முகுந்தன் நடன கலைஞராகவே நடிக்கிறார்.
இதுகுறித்து இயக்குனர் முகேஷ் குமார் கூறும்போது “கண்ணப்பா' படத்தில் ப்ரீத்தி நடிக்கும் முக்கிய கதாபாத்திரத்திற்கான நடிகர்கள் தேர்வு செயல்முறை கடுமையானதாக இருந்தது. விஷ்ணு மஞ்சு, மோகன்லால் மற்றும் பிரபாஸ் உள்ளிட்ட இந்திய சினிமாவின் உச்ச நடிகர்களுடன் ப்ரீத்தி இணைந்து நடிப்பது, அவரது திரைப்பயணத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
ப்ரீத்தி பரதநாட்டிய நடனக் கலைஞர் என்பதால், 'கண்ணப்பா'வில் அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது. படத்தில் இடம்பெறும் பெரிய அளவிலான சண்டைக்காட்சிகளுடன் அவரது நடனக் காட்சிகளும் பார்வையாளர்களுக்கு காட்சி விருந்தாக இருக்கும், ப்ரீத்திக்கு இந்த வாய்ப்பு திரையுலகில் குறிப்பிடத்தக்கது மட்டும் அல்ல, கலை, சினிமா மற்றும் பெரும்பாலும் கற்றல் உலகிற்கு ஒரு பாய்ச்சல். அவர் இந்த பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருந்தார், அவருடன் பணியாற்ற நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்றார்.