நானியின் ‛தி பாரடைஸ்' படப்பிடிப்பு தாமதமாவது ஏன்? | நான் வாழ்ந்து வளர்ந்த இடத்தில் விமான விபத்து நடந்தது வேதனை அளிக்கிறது : உன்னி முகுந்தன் | தமிழுக்கு வரும் நரிவேட்ட ஹீரோயின் | கவுரவ டாக்டர் பட்டம்: அட்லிக்கு வாழ்த்து சொன்ன அல்லு அர்ஜுன் | குடியிருந்த கோயில், அவ்வை சண்முகி, போர் தொழில் - ஞாயிறு திரைப்படங்கள் | திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் |
திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்து, இயக்கிய படம் 'மாயவன்'. 2017ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்திருந்தனர். தற்போது இதன் இரண்டாம் பாகம் 'மாயா ஒன்' என்ற பெயரில் உருவாகிறது. இதனையும் சி.வி.குமாரே இயக்குகிறார்.
தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். சந்தீப் கிஷன் நாயகனாக தொடர, 'கத்தி' படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பாலிவுட் நடிகை ஆகன்ஷா ரஞ்சன் கபூர் நாயகியாக நடிக்கிறார். ஆகன்ஷா 'கில்தி' என்ற படத்தில் அறிமுகமாகி 'மோனிகா ஓ மை டார்லிங்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 'ரே' என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.