ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

நடிகர் சித்தார்த் நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் சித்தா என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் கதைக்கருவும் அதை வித்தியாசமாக படமாக்கிய விதமும் ரசிகர்களிடம் மட்டுமல்ல விமர்சகர்களிடமும் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது. குறிப்பாக நீண்ட நாட்களாக ஒரு நல்ல வெற்றிக்காக காத்திருந்த நடிகர் சித்தார்த்திற்கு இந்த படம் ஒரு கம் பேக் படமாக அமைந்து விட்டது. இந்த நிலையில் இந்த படம் குறித்தும் சித்தார்த்தின் நடிப்பு குறித்தும் மனம் திறந்து பாராட்டியுள்ளார் நடிகை நயன்தாரா.
இதுகுறித்து நயன்தாரா கூறும்போது, “2023ல் வெளியான சிறந்த திரைப்படங்களில் சித்தாவும் ஒன்று. சித்தார்த், இது உங்களுடைய படங்களிலேயே மிகச் சிறந்த படம். இயக்குனர் அருண்குமார் என்ன மாதிரியான ஒரு அற்புதமான கலையை நீங்கள் உருவாக்கி இருக்கிறீர்கள். அருண்குமாருக்கும் சித்தார்த்திற்கும் இதை சாத்தியமாக்கிய படத்தின் மொத்த குழுவுக்கும் என்னுடைய மிகப்பெரிய பாராட்டுக்கள்” என்று கூறியுள்ளார்
நயன்தாராவை பொருத்தவரை அவ்வளவு சுலபத்தில் வேறு ஒரு படம் குறித்து மனம் திறந்து பாராட்ட மாட்டார். தற்போது சித்தார்த்துடன் டெஸ்ட் என்கிற படத்தில் இணைத்து நடித்து வரும் நயன்தாரா அந்த நட்பின் அடிப்படையில் இந்தப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.