நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ள 'அயலான்' படம் அடுத்த வாரம் ஜனவரி 12ம் தேதி வெளியாக உள்ளது.
வெளிக்கிரகத்து 'ஏலியன்' கதாபாத்திரத்தை மையப்படுத்திய இந்தப் படம் சயின்ஸ் பிக்ஷனாகவும், கலகலப்பான படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. நேற்று இந்தப் படத்தின் டிரைலர் வெளியான பிறகு ஒரு பக்கம் நல்ல வரவேற்பு இருந்தாலும் மறுபக்கம் காப்பி சர்ச்சையும் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.
கிரேக் மோட்லா இயக்கத்தில், நிரா பார்க், டிம் பீவன், எரிக் பெல்னர் நடித்து 2011ல் வெளிவந்த 'பால்' ஆங்கிலப் படத்தின் காப்பி தான் 'அயலான்' என கூறி வருகிறார்கள்.
வெளிகிரகத்திலிருந்து பூமிக்கு தவறுதலாக வந்த ஏலியன் ஒன்றை ஆராய்ச்சி செய்து பார்க்க சில விஞ்ஞானிகள் முயற்சிக்கிறார்கள். ஆனால், அந்த ஏலியனைக் காப்பாற்றி அதை மீண்டும் அவர்கள் கிரகத்திற்கே திருப்பி அனுப்ப இரண்டு நண்பர்கள் முயற்சிக்கிறார்கள். அதை காமெடி கலந்து சொன்ன படம்தான் 'பால்'.
நேற்று வெளியான 'அயலான்' டிரைலரைப் பார்க்கும் போது அது 'பால்' படத்தின் கதையை காப்பியடித்து உருவாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பியுள்ளார்கள். கூடவே, பூமி பாதுகாப்பு, விவசாயம் என சமூக அக்கறையுடன் சில விஷயங்களை சேர்த்துவிட்டார்கள் என்கிறார்கள். இது உண்மையா என்பது 'அயலான்' படம் வந்த பிறகே தெரியும்.