துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தெலுங்குத் திரையுலகின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவர் ராம் சரண். தற்போது ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் கடந்த சில வருடங்களாக நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பிறகு 'உப்பெனா' பட இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் அவரது 16வது படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. இன்று ரகுமானின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து சொல்லியதன் மூலம் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த போஸ்டரைப் பகிர்ந்து ராம் சரண், “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரஹ்மான் சார், எப்போதும் உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்த்துகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஷங்கர் இயக்கி வரும் 'கேம் சேஞ்சர்' படத்திலேயே ஏஆர் ரகுமான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படத்திற்கு தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தமானார். ராம் சரண் நடிக்கும் படம் ஒன்றிற்கும், தெலுங்கிலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைக்கிறார் ராம் சரண்.