தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சென்னை, தரமணியில் இருந்த தமிழக அரசின் பிலிம் சிட்டி தற்போது முழுமையாக செயல்படவில்லை. அங்கு 'டைடல் பார்க்' வந்த பிறகு பிலிம் சிட்டியின் பெரும்பான்மையான இடங்கள் அதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. சில அரங்குகள் மட்டுமே இருந்த நிலையில் அதை யாரும் பயன்படுத்துவதும் இல்லை.
தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவுக்கே முதன்மையான இடமாக இருந்த சென்னையில் தற்போது சில தனியார் ஸ்டுடியோக்கள் மட்டுமே இருக்கின்றன. இந்நிலையில் சென்னை, பூந்தமல்லியில் 500 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு சார்பில் அதிநவீன புதிய திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.
அதை செயல்படுத்தும் விதமாக தற்போது அதற்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. அதற்கான மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்கான ஆலோசகர்களை நியமிப்பதற்கான டெண்டர்களை தமிழ்நாடு உள்கட்டமைப்பு வாரியம் வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 26ம் தேதி 3 மணிக்குள் டெண்டர்களை சமர்ப்பிக்கவும், அன்று மதியம் 3.30க்கு டெண்டர்களை திறக்கவும் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெண்டருக்கு முந்தைய மீட்டிங் பிப்ரவரி 5ம் தேதி நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.