தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் தமிழில் வெளிவந்த 'அயலான்' படம் தெலுங்கில் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் சட்டச் சிக்கல் காரணமாக படம் வெளியாகவில்லை. காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாலையிலாவது படம் வெளியாகும் என்று ரசிகர்கள் நினைத்தார்கள். அதுவும் நடக்காமல் பட வெளியீடு தள்ளிப் போயிருக்கிறது.
படம் வெளியாகாமல் போனதற்கு என்ன காரணம் என படத்தின் தயாரிப்பு நிறுவனமும், தெலுங்கில் படத்தை வெளியிடும் நிறுவனமும் எதுவுமே சொல்லவில்லை. பொங்கலுக்கு படத்தை தெலுங்கில் வெளியிடாமல் சிலர் தடுத்ததற்கு பொங்கி எழுந்த வினியோக நிறுவனம் அப்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதே சமயம் நேற்று வெளியாகாமல் போனதற்கு எதுவுமே சொல்லாமல் போனது தெலுங்கில் உள்ள சிவகார்த்திகேயன் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.
அடுத்த வாரம் பல தெலுங்குப் படங்கள் வெளிவர உள்ளதாம். அதற்கடுத்த வாரம் 'அயலான்' படத்தின் தமிழ்ப் பதிப்பு ஓடிடியில் வெளிவந்துவிடும். எனவே, அடுத்த வாரம் தெலுங்கில் படம் வெளியானாலும் ஒரு வாரம் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும். நேற்றைய வெளியீட்டிற்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் இந்த வார விடுமுறை நாட்களை பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார்கள் 'அயலான்' குழுவினர்.