சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு |

தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் ஷங்கர். தெலுங்கில் முதல் முறையாக ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்க 'கேம் சேஞ்சர்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம், ராம் சரணின் 15வது படம் என இப்படம் பற்றி அறிவிக்கப்பட்டது. அந்த வருடத்தின் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகி கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. கடந்த வருடம் மார்ச் மாதம் இப்படத்திற்கு 'கேம் சேஞ்சர்' என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டது.
கடந்த வருட தீபாவளிக்கு இப்படத்தின் முதல் சிங்கள் 'ஜருகண்டி' வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் திடீரென தள்ளிவைக்கப்பட்டது. அதன்பின் இப்படம் இந்த 2024ம் வருடம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பவன் கல்யாண் நடித்து வரும் 'ஓஜி' படம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், 'கேம் சேஞ்சர்' படம் அந்த சமயத்தில் வெளியாக வாய்ப்பில்லை என டோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டது. தசரா சமயத்தில்தான் 'கேம் சேஞ்சர்' வெளியாகலாம் என்று தகவல் வெளியானது. படம் மேலும் தள்ளிப் போகும் தகவலைக் கேட்டு ராம் சரண் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளார்கள்.
இதையடுத்து இயக்குனர் ஷங்கரை கடுமையாக விமர்சித்து ராம் சரண் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அவர்களை தயாரிப்பாளர் தில் ராஜு, ராம் சரண் ஆகியோர் சமாதானப்படுத்துவார்களா என்பது தெரியவில்லை.