படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய நடிகர் மன்சூரலிகான் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அதையடுத்து நேரில் ஆஜரான அவர், தனது பேச்சுக்கு த்ரிஷாவிடம் வருத்தம் தெரிவிப்பதாக கூறினார். ஆனால் அப்படி கூறியவர் அதையடுத்து த்ரிஷா மற்றும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மன்சூர் அலிகான் சர்ச்சையாக பேசியது தவறு என்றும், இதற்கு மானநஷ்ட வழக்கு தொடர முடியாது என்று கூறியதோடு, விளம்பர நோக்கில் மனு தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதாக உத்தரவிட்டார். அதையடுத்து தான் நிதி நெருக்கடியில் இருப்பதாகச் சொல்லி ஒரு லட்சம் ரூபாயை கட்டுவதற்கு 10 நாட்கள் அவகாசம் கேட்டிருந்தார் மன்சூர் அலிகான்.
அவருக்கு நீதிபதி அவகாசம் அளித்த நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்னொரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் மன்சூர் அலிகான். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அபராத பணம் ஒரு லட்சத்தை கட்டுவதாக தனி நீதிபதியிடம் ஒப்புக்கொண்டு கால அவகாசமும் கேட்ட நிலையில், அந்த தீர்ப்பை ரத்து செய்ய மனு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியதோடு, அதே நீதிபதியிடம் உத்தரவை திரும்ப பெற கோரிக்கை வைக்கலாம். அல்லது பணம் கட்ட முடியும், முடியாது என்பதை அவரிடத்தில் தெரிவிக்கலாம் என்று உத்தரவிட்டு மன்சூர் அலிகானுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.