டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான ரஜினிகாந்த், விஜய் ஆகியோரது ரசிகர்களுக்கு இடையே கடந்த சில வருடங்களாகவே ஒரு சண்டை நடந்து வருகிறது. அது 'சூப்பர்ஸ்டார்' என்ற பட்டத்துக்குரிய சண்டை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
'ஜெயிலர்' இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய 'காக்கா, கழுகு' கதை அந்த சண்டையை அதிகமாக்கியது. ஒரு வழியாக 'லால் சலாம்' இசை வெளியீட்டில் அந்த சண்டைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்து பேசினார் ரஜினிகாந்த்.
இப்போது தனது அரசியல் பாதையின் முதல் படியை எடுத்து வைத்துள்ளார் விஜய். அதனால், அவரது ரசிகர்கள் இதற்கு மேல் ரஜினிகாந்த், அஜித் ரசிகர்களுடன் சண்டை போட வாய்ப்பில்லை. 'கோட், விஜய் 69' ஆகிய இரண்டு படங்களுடன் விஜய் ரசிகர்களின் சினிமா சண்டை முடிவுக்கு வந்துவிடும். இனி, “சூப்பர் ஸ்டார்” பட்டம், “யார் அதிக வசூல் ” என்றெல்லாம் அவர்கள் பேச முடியாது.
அரசியல் கட்சி அறிவிப்பு வந்தவுடனேயே ஸ்ட்ரெயிட்டாக '2026ல் அடுத்த சிஎம்' என 'சூப்பர் ஸ்டார்' சண்டையை விட்டுவிட்டு 'சீப் மினிஸ்டர்' சண்டைக்குப் போய்விடுவார்கள். அதை ஆரம்பித்தும் விட்டார்கள்.