ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

தா.சே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் 'வேட்டையன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி, திருவனந்தபுரம், மும்பை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது
சமீபத்தில் ஆந்திராவில் உள்ள கடப்பாவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த நிலையில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினி ஐதராபாத்திற்கு சென்றார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது. மார்ச் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் என கூறப்படுகிறது.