மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
காதல் தேசம், முதல்வன், பாய்ஸ், சிவாஜி என பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் கே.வி.ஆனந்த். கனா கண்டேன் என்ற படத்தில் இயக்குனரான அவர், சூர்யா நடிப்பில் அயன், மாற்றான், காப்பான் போன்ற படங்களை இயக்கினார். இந்த மூன்றுமே சூர்யாவுக்கு ஹிட் படங்களாக அமைந்தன. காப்பானுக்கு பிறகு படங்கள் இயக்காத கே.வி.ஆனந்த், கடந்த 2021 ஆம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார்.
இந்த நிலையில் கே.வி.ஆனந்தின் மகளுக்கு திருமணம் நிச்சயம் ஆகி உள்ளது. இதையடுத்து நடிகர் சிவகுமார் மற்றும் சூர்யா ஆகியோர் கே.வி.ஆனந்தின் வீட்டிற்கு சென்று அவரது மகளுக்கு திருமண வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.