போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இதற்கு திரையுலகினர் பலரும் நிதி அளித்துள்ளனர். இடையில் நடிகர் சங்கம் தேர்தல் தொடர்பாக நடந்த பிரச்னையால் இந்த பணிகள் நின்று போகின. தற்போது மீண்டும் கட்டடத்தை கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கட்டடத்தை முழுமையாக கட்டி முடிக்க இன்னும் பல கோடி நிதி தேவைப்படுகிறது. இதை திரட்ட பல்வேறு முயற்சிகளை நடிகர் சங்கம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் அமைச்சர் உதயநிதி, நடிகர் சங்க கட்டட பணியைத் தொடர்வதற்காக சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார். இதை நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன், செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நடிகர் சங்கத்திற்கு ரூ.1 கோடி நிதி வழங்கிய உதயநிதிக்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.