தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பெங்களூரு: 'இம்முறை லோக்சபா தேர்தலில், எந்த வேட்பாளருக்கும் ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டேன்' என நடிகர் யஷ் கூறியிருப்பது, எம்.பி., சுமலதா அம்பரிஷுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் சுமலதா அம்பரிஷ் சுயேட்சையாக களமிறங்கினார். ஸ்டார் நடிகர்கள் தர்ஷன், யஷ் உட்பட பலர் சுமலதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். அவர் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை லோக்சபா தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வைத்துள்ளதால், மாண்டியா தொகுதியை ம.ஜ.த.,வுக்கு விட்டுத்தரும் வாய்ப்புள்ளது. தொகுதியில் தானே களமிறங்குவதாக சுமலதா பிடிவாதமாக இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். தொகுதியை விட்டுத்தரும்படி கோரியுள்ளார்.
இன்னும் மாண்டியா தொகுதி இழுபறியில் உள்ளது. இம்முறை பா.ஜ., சார்பிலோ அல்லது சுயேச்சையாக சுமலதா போட்டியிட்டால், நடிகர்கள் பிரசாரம் செய்வரா என்ற கேள்வி எழுந்தது.
இது தொடர்பாக நடிகர் யஷ் கூறுகையில், ''லோக்சபா தேர்தலில், நான் எந்த வேட்பாளரையும் ஆதரித்து, பிரசாரத்துக்கு செல்லமாட்டேன். என் குறிக்கோள் சினிமா மட்டுமே. அரசியல் எங்களுக்கு தேவையில்லை,'' என்றார்.
இதனால், சுமலதா தரப்பு அதிர்ச்சியில் உள்ளது.