5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்கும் 'அமரன்' படத்தின் தலைப்பு அறிவிப்பும், அதற்கான வீடியோவும் நேற்று வெளியானது.
இந்திய ராணுவத்தில் மேஜர் ஆகப் பணியாற்றி 2014ம் அன்று ஜம்மு காஷ்மீரில் மூன்று முஸ்லிம் தீவிரவாதிகளைக் கொன்று, தாக்குதலில் படுகாயமடைந்து பின் வீர மரணம் அடைந்தார். அசோக சக்கரம் விருது வென்ற அவரது பயோகிராபி படம்தான் 'அமரன்'.
இப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இப்படத்தின் நேற்றைய தலைப்பு வீடியோவைப் பகிர்ந்து சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார் படத்தின் கதாநாயகி சாய் பல்லவி.
“இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிவகார்த்திகேயன், மேஜர் முகுந்த் வரதராஜனை உங்களது உருவத்தில் இந்த உலகம் காணப் போவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் மீது வைத்துள்ள அன்பையும், மரியாதையையும் உங்கள் மீதும் பொழிவார்கள். வாழ்க்கையை மாற்றக் கூடிய படங்களுக்காக கலைஞர்களான நாம் எவ்வளவு காலம் காத்திருக்கிறோம். அது இப்போது ராஜ்குமார் பெரியசாமி மூலம் நாம் இணையும் படத்தில் நடப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.