மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
நடிகர் அஜித் திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‛விடாமுயற்சி' என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருடன் த்ரிஷா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆக்ஷன் படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் அஜர்பைஜான் நாட்டில் படமாகி வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்புக்கு சற்று ஓய்வு கிடைத்த நிலையில் சென்னை திரும்பினார் அஜித். தனது மகனின் பிறந்தநாளையும் கொண்டாடினார். விரைவில் ‛விடாமுயற்சி' படப்பிடிப்புக்காக மீண்டும் அஜர்பைஜான் பறக்க உள்ளார்.
இந்நிலையில் அஜித் திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது வழக்கமான உடல் பரிசோதனை என கூறுகிறார்கள். மீண்டும் படப்பிடிப்புக்கு வெளிநாடு செல்ல உள்ளதால் உடல் பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மாலையோ அல்லது நாளைக்குள் வீடு திரும்புவார் என்கிறார்கள்.