'மார்க்' டப்பிங் படத்துடன் ஆரம்பமான 2026 வெளியீடுகள் | ரஜினி 173... அஸ்வத் மாரிமுத்துவிற்கு அடிக்கிறது அதிர்ஷ்டம் | 2026ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் : வசூல் சாதனை புரியுமா ? | ரஜினி 173, கமல் 237, அஜித் 64, தனுஷ் 55 : பொங்கலுக்குள் அறிவிப்புகள் வருமா? | அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் | போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! |

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2002ம் ஆண்டு விஜயகாந்த் நடித்து வெளியான படம் ரமணா. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஒரு ரயில்வே ஸ்டேஷனில், விஜயகாந்த் போலீஸிடம் சரண் அடையும் காட்சி படமாக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 23 ஆண்டுகள் கழித்து தனது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 23வது படத்தின் படப்பிடிப்பையும் இதே ரயில் நிலையத்தில் நடத்தி இருக்கிறார் ஏ.ஆர். முருகதாஸ்.
அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், ‛‛மிஸ் யூ கேப்டன்'' என்று பதிவிட்டுள்ளார். சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டு அடுத்து ஹிந்தியில் சல்மான்கான் நடிக்கும் படத்தை முருகதாஸ் இயக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.