பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மார்ச் மாதக் கடைசி வாரத்திற்கு வந்துவிட்டோம். கடந்த மூன்று மாதங்களாகவே தமிழ் சினிமா முட்டி மோதிக் கொண்டிருக்கிறது. 'மஞ்சும்மேல் பாய்ஸ்' மலையாளப் படத்தைத் தவிர வேறு எந்த ஒரு தமிழ்ப் படமும் லாபரகமாக அமையவில்லை என்பதுதான் பாக்ஸ் ஆபீஸ் தகவலாக இருக்கிறது.
தேர்தல் பிரச்சாரம் ஒரு பக்கம், பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம், முழு ஆண்டுத் தேர்வுகள் இன்னொரு பக்கம் என சினிமாவுக்கு பல முனைகளிலிருந்தும் தாக்குதல் நடந்து வருகிறது. நல்ல படங்கள் வந்தால் மட்டுமே தியேட்டர்கள் பக்கம் வருகிறோம், எங்களுக்கு மொழி ஒரு பிரச்சனையே அல்ல என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் கடந்த ஒரு மாத காலமாக புரிய வைத்துள்ளார்கள்.
இந்நிலையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமையும் ஏழு படங்கள் வரை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “பூமர் அங்கிள், எப்புரா, ஹாட் ஸ்பாட், இடி மின்னல் காதல், நேற்று இந்த நேரம், த பாய்ஸ், வெப்பம் குளிர் மழை,” ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. கிடைக்கும் இடைவெளியில் படங்களை வெளியிட்டாக வேண்டிய சூழலில் இத்தனை படங்கள் ஒரே நாளில் வருகின்றன.