சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தமிழ் சினிமாவில் இது இரண்டாம் பாக சீசன். பெரிய படங்கள் மட்டுமல்ல பல சிறிய பட்ஜெட் படங்களின் இரண்டாம் பாகமும் தயாராகிறது. அந்த வரிசையில் வருகிறது 'ஹாட்ஸ்பாட்' படத்தின் இரண்டாம் பாகம். கடந்த மார்ச் மாதம் வெளிவந்த இந்த படம் நான்கு விதமான காதல்களை அந்தாலஜி பாணியில் சொன்னது. முதன்முறையாக ஆண் விபச்சாரம் என்கிற கதையை அறிமுகப்படுத்தியது. இந்த படத்தில் கலையரசன், சோபியா, சாண்டி, அம்மு அபிராமி, ஜனனி, கவுரிகிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விக்னேஷ் கார்த்திக் இயக்கி இருந்தார்.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விஷ்ணு விஷால் நடிக்கிறார். அதோடு அவரும் இணை தயாரிப்பாளராகி இருக்கிறார். கே.ஜெ.பி.டாக்கீஸ் பாலமணி மார்பன், செவன் வாரியர்ஸ் பிலிம்ஸ் சுரேஷ்குமார் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
படம் குறித்து இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் கூறும்போது, ''ஹாட்ஸ்பாட் படத்துக்கு பெரிய ஆதரவு கிடைத்தது. ஓடிடியிலும் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. முதல் பாகத்தைப் போலவே, இரண்டாம் பாகமும் எல்லோரையும் மகிழ்விக்கும். இதில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும்'' என்றார்.