தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி மற்றும் பலர் நடிப்பில் சங்கராந்திக்கு வெளிவந்த தெலுங்குப் படம் 'ஹனுமான்'. இப்படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வசூல் சாதனை புரிந்தது.
படம் வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் ஓடிடி தளங்களில் வெளியானது. பான் இந்தியா படமாக வெளியான இப்படம் ஓடிடியில் தெலுங்கில் மட்டுமே வெளியானது. மற்ற மொழிகளில் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகாமலே இருந்தது.
இந்நிலையில் தற்போது அதை அறிவித்துள்ளனர். தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் எப்ரல் 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு பதிப்பு ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் மற்ற தென்னிந்திய மொழிகள் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
ஓடிடி தளத்தில் தெலுங்கில் வெளியான 'ஹனுமான்' 200 மில்லியன் நிமிடப் பார்வைகளைக் கடந்துள்ளது. அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகியிருந்தால் இந்த சாதனை அதிகமாகி இருக்கும். ஆனால், அதை படக்குழு செய்யத் தவறிவிட்டது.