துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர் நடித்த 'தி பேமிலி ஸ்டார்' படம் வருகிற 5ம் தேதி தெலுங்கு, தமிழ் மொழிகளில் வெளியாகிறது. ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். பரசுராம் இயக்கி உள்ளார். கே.யூ.மோகனன் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார்.
படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு விஜய் தேவரகொண்டா பேசியதாவது: சென்னைக்கு வரும்போதெல்லாம் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். என்னுடைய நடிப்பில் வெளியான முதல் படம் 'அர்ஜுன் ரெட்டி'க்கு தமிழ் ரசிகர்கள் அளித்த ஆதரவு மறக்க இயலாது. தற்போது மீண்டும் இயக்குநர் பரசுராமுடனும், தயாரிப்பாளர் தில் ராஜுடனும் இணைந்து 'தி பேமிலி ஸ்டார்' படத்தின் மூலம் சந்திக்கிறேன்.
இயக்குநர் பரசுராமுடன் இணைந்து 'கீதா கோவிந்தம்' படத்தில் நடித்திருந்தேன். அதனைத் தொடர்ந்து 'தி பேமிலி ஸ்டார்' படத்தில் நடித்திருக்கிறேன். இது அந்த படத்தை விட கூடுதல் உயரத்திற்கு என்னை அழைத்துச் செல்லும் என நம்புகிறேன். இதற்கு முன் எனது நடிப்பில் வெளியான 'குஷி' திரைப்படத்திற்கும் இங்கு ஆதரவு இருந்தது. இதேபோல் இந்த படத்திற்கும் ஆதரவும் அன்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடுத்தர வர்க்க இளைஞராக நடித்திருக்கிறேன். அன்பு செலுத்துவதிலும், காதலிப்பதிலும், நேசிப்பதிலும், கோபத்திலும் ஒரு எக்ஸ்ட்ரீம் நிலையை எதிர்கொள்பவன் தான் இப்படத்தில் நாயகன். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். படத்தின் நாயகியான மிருணாள் தாக்கூர் அற்புதமான ஒத்துழைப்பை வழங்கிய சக கலைஞர் என்றார்.