5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், யோகிபாபு, அஜ்மல், சினேகா, லைலா ஆகியோர் நடிக்கின்றனர். மீனாட்சி சவுத்ரி ஹீரோயின். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
படத்தின் 4வது கட்ட படப்பிடிப்புக்காக துபாய் சென்றுள்ளார் விஜய். படப்பிடிப்பு இடைவெளியில் துபாயில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இந்த புகைப்படங்களை விஜய் நற்பணி இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். பிறகு அந்த படத்தை அவர் நீக்கிவிட்டார்.
காவி உடை அணிந்த கோவில் நிர்வாகிகளுடன் இருப்பதை பகிர்ந்து, பாரதிய ஜனதா கட்சிக்கு விஜய் தனது ஆதரவை மறைமுகமாக தெரிவிப்பது மாதிரியாக விமர்சனம் வந்ததால் அந்த போட்டோவை நீக்கிவிட்டதாக கூறுகின்றனர்.