திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் | ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் |

ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இணையும் ரஜினியின் 171வது படம் பற்றிய அறிமுக போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. இப்படம் பற்றி அடுத்தடுத்து சில அப்டேட்கள் வெளிவந்தன. அவற்றில் எதுவுமே அதிகாரப்பூர்வமானது அல்ல. ஆனால், படத்தில் மல்டிஸ்டார்கள் இடம் பெறுவது மட்டும் உறுதி என்கிறார்கள்.
இதனிடையே, இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தலைப்பு அறிவிப்பை தனது ஸ்டைலில் ஒரு வீடியோவாக எடுத்து வெளியிட திட்டமிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்', விஜய்யை வைத்து 'லியோ' படங்களுக்காக அப்படித்தான் அறிமுக வீடியோவை வெளியிட்டார். அவை பரபரப்பாகப் பேசப்பட்டன. அதே பாணியை ரஜினிக்கும் பாலோ செய்கிறார்.
நாளை சென்னையில் தயாரிப்பு நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டுடியோவில் அதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அந்த அறிமுக வீடியோ தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகுமா என்று ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.