5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
கிரிஷ் இயக்கத்தில், நஸ்லன், மமிதா பைஜு, சங்கீத் பிரதாப் மற்றும் பலர் நடிப்பில் பிப்ரவரியில் வெளிவந்த மலையாளப் படம் 'பிரேமலு'. இப்படம் தெலுங்கு, தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்தது. இப்படம் கடந்த வாரம் ஓடிடி தளத்திலும் வெளியானது.
இப்படத்தை நயன்தாரா இப்போதுதான் பார்த்திருக்கிறார். படத்தின் ஸ்கிரீன்ஷாட் ஒன்றைப் பகிர்ந்து, “சிறந்த படங்கள் என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறது,” எனப் பாராட்டியுள்ளார். தியேட்டர்கள் மூலம் மட்டுமே 130 கோடி வரை வசூலித்துள்ள இப்படத்திற்கு தற்போது ஓடிடி தளங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சுமார் 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் இவ்வளவு கோடி வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. பல சினிமா பிரபலங்களும் இப்படத்தைப் பாராட்டியுள்ளனர்.