துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
அஜித் 'அமர்களம்' படத்தில் நடித்தபோது உடன் நடித்த ஷாலினியை காதலித்து கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.
அஜித், ஷாலினி இருவரும் குடும்ப வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதாரணமாக திகழ்கிறார்கள். இவர்கள் இருவரும் ஆண்டுதோறும் தங்கள் திருமண நாளை கொண்டாடுவார்கள். இருவரும் வெவ்வேறு நாடுகளில் இருந்தாலும் ஏப்ரல் 24ம் தேதி ஒருவரை ஒருவர் சந்தித்து தங்கள் திருமண நாளை கொண்டாடுவார்கள்.
இந்த ஆண்டு இருவருமே சென்னையில் இருப்பதால் நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு சென்று அங்கு விருந்து அருந்தி கொண்டாடி உள்ளனர். ஓட்டல் ஊழியர்கள், அங்கு வந்தவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.