தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
'நடிகையர் திலகம்' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, திஷா பதானி, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கல்கி 2898 ஏடி'. சயின்ஸ் பிக்ஷன் படமாக வெளிவர உள்ள இப்படத்தில் நடிக்கும் ஒவ்வொருவருக்குமான சம்பளம் மட்டுமே சுமார் 250 கோடியைக் கடந்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படத்தின் கதாநாயகன் பிரபாஸ் சம்பளம் 150 கோடி, படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனே, முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் அமிதாப்பச்சன், சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் கமல்ஹாசன் ஆகியோருக்கு தலா 20 கோடியும், மற்றொரு கதாநாயகியான திஷா படானிக்கு 5 கோயும் சம்பளம் வழங்கப்படுகிறதாம். மற்ற நடிகர்கள், நடிகைகளின் சம்பளத்தையும் சேர்த்து அது மட்டுமே 250 கோடியைக் கடந்துள்ளதாம்.
படத்தின் மொத்த செலவு 500 கோடியைக் கடக்கும் என்கிறார்கள். ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவை மூலம் மட்டுமே சுமார் 50 சதவீத வருவாயைப் பெற முடியுமாம். தியேட்டர் விற்பனையும் சிறப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டில் வெளியாக உள்ள தென்னிந்தியப் படங்களில் இந்தப் படம்தான் அதிக வசூலைக் குவிக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.