துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான பிரேமலு படம் மூலமாக கேரளா மட்டுமல்லாது தமிழகம் மற்றும் ஆந்திரா என தென்னிந்திய அளவில் மிகவும் புகழ் பெற்ற நடிகையாக மாறியவர் மமிதா பைஜூ. குறிப்பாக இளைஞர்களின் பேவரைட் நடிகையாக மாறிவிட்டார். தமிழில் ஜிவி பிரகாஷ் நடித்த ‛ரெபல்' படத்திலும் நடித்தார். இவர் இன்று கேரளாவில் இரண்டாம் கட்டமாக நடக்கும் பார்லிமென்ட் தேர்தலில் ஓட்டளிக்க முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளார்.
ஆம்... இவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மகள் சினிமாவில் பிஸியாகி விட்டதால் அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என சரி பார்ப்பதற்கு நேரம் கிடைக்காமல் போய்விட்டது என அவரது தந்தை டாக்டர் பைஜு கூறியுள்ளார்.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் நாடு முழுவதும் இருக்கும் மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு ஓட்டளிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் யூத் ஐகானாக கேரளாவில் தேர்வு செய்யப்பட்டவர் மமிதா பைஜூ. அப்படிப்பட்டவரின் பெயரே வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டுப் போய் இருப்பதை என்னவென்று சொல்வது?