‛அரசன்'-ல் அனிருத் விலகலா : தயாரிப்பாளர் தாணு பதில் | திகில் கதையில் பிரியங்கா மோகன் | சமந்தாவிற்கு ஆண் குழந்தை : பெயரையும் அறிவித்தார் | பிரபல இயக்குனரின் பேத்தியை மணந்தார் நடிகர் அஸ்வின் குமார் | பெண் போராளியாக நடிக்கும் இனியா | பிளாஷ்பேக் : 'அண்ணாமலை'யை இயக்கிய 3வது இயக்குநர் | பிளாஷ்பேக் : 8 ஆயிரம் அடி நீக்கப்பட்ட 'பச்சை விளக்கு' | சர்வதே பதுக்கல் பின்னணியில் உருவாகும் 'சிவப்பு நட்த்திரம்' | மீண்டும் அம்மா ஆகிறார் 'மைனா' நந்தினி | மிஷ்கினுக்கும் எனக்கும் அப்பா - மகள் உறவு : கீர்த்தி சுரேஷ் கோபம் |

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், ஜனவரி மாதம் அங்கிருந்து சென்னை திரும்பிய படக்குழு அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பை தொடங்கவில்லை. இந்த நிலையில் அஜித் நடிப்பில் ‛குட் பேட் அக்லி' என்ற படத்தின் வேலைகளை தொடங்கிவிட்ட ஆதிக் ரவிச்சந்திரன், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை வருகிற மே 10ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அதன்பிறகு மீண்டும் அஜர்பைஜான் நாட்டுக்கு சென்று விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம் அஜித். மேலும், விடாமுயற்சி படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரும் நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு குட் பேட் அக்லி திரைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.




