கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' |
கடந்த வருடம் சமந்தா நடிப்பில் சாகுந்தலம் மற்றும் குஷி என இரண்டு படங்கள் தெலுங்கில் வெளியாகின. இதில் குஷி ஓரளவு டீசன்டான வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சமந்தாவின் 37வது பிறந்த நாளான நேற்று அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு ஒன்றை அவரே தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
மா இன்டி பங்காரம் என இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ல் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான பங்காரம் என்கிற படத்தின் டைட்டிலை மீண்டும் இந்தப்படத்திற்கு வைத்துள்ளார்கள். அதேசமயம் படத்தின் இயக்குனர் மற்றும் உடன் நடிப்பவர்கள் குறித்த விவரம் எதுவும் தற்போது வெளியாகவில்லை.
இந்தப் படம் குறித்து குறிப்பிட்டுள்ள சமந்தா, “தங்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக எல்லாமே மினுமினுக்க வேண்டியது இல்லை” என்று கூறியுள்ளார். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்கிற பழமொழியை அப்படியே உல்டாவாக மாற்றி இந்த படத்தின் கரு குறித்து சமந்தா கூறியுள்ளார் என்று தெரிகிறது.
இந்த படத்தில் சமந்தா ஒரு புரட்சிப்பெண்ணாக நடிக்கிறார் என்பது இதுகுறித்து வெளியாகி உள்ள போஸ்டரில் அவர் இரட்டை குழல் துப்பாக்கியை வைத்துக் கொண்டிருப்பதை பார்க்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது.