வாழ்த்து சொன்ன மோகன்லால் ; சந்திக்க நேரம் கேட்ட ஷாருக்கான் | பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் ஷானவாஸ் காலமானார் | தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' |
பெல்காமை சேர்ந்தவர் ராய் லட்சுமி. மிஸ்.பெல்காம் அழகியாக வெற்றி பெற்றவர் 'கற்க கசடற' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு 'காஞ்சனாமாலா கேபிள் டிவி' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். 'ராக்அன் ரோல்' படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார், 'வால்மீகி' படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார். 'அகிரா' படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். எல்லா மொழிகளிலும் சேர்த்து 50 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக வலம்வர முடியவில்லை.
இப்போதும் சமூக வலைத்தளங்கள், வெளிநாட்டு பயணங்களில் பிசியாக இருக்கிறார். அவ்வப்போது பிகினி உடை அணிந்து தனது கவர்ச்சியான படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். தமிழில் கடைசியாக 3 வருடங்களுக்கு முன்பு 'சின்ட்ரெல்லா' என்ற படத்தில் நடித்தார். அண்ணாச்சி நடித்த 'தி லெஜண்ட்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். தற்போது தமிழ் படங்கள் எதுவும் கையில் இல்லை.
ராய் லட்சுமி சில தினங்களுக்கு முன்பு தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் “என்னுடைய பிறந்தநாள் டன் கணக்கில் அன்பு, ஆசீர்வாதம் மற்றும் ஆச்சரியங்களுடன் தொடங்கியது. குறிப்பாக என் அன்புக்குரியவர்கள் இவ்வளவு அன்பைக் கொட்டியதற்கு மிக்க நன்றி, இந்த அதீத அன்புக்கு நான் என்ன செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் உண்மையிலேயே விசேஷமாக உணர்கிறேன். உலகம் முழுவதிலுமிருந்து வந்த அனைத்து வாழ்த்துக்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. என்னைச் சுற்றி இதுபோன்ற அற்புதமான குடும்பம், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் அன்பான மக்கள் இருப்பதில் நான் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. அனைவருக்கும் நன்றியும் அன்பும்” என்று எழுதியுள்ளார்.