மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
சுந்தர். சி இயக்கி நடித்து திரைக்கு வந்துள்ள படம் அரண்மனை 4. அவருடன் தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இப்படம் திரைக்கு வந்து 10 நாட்களில் 55 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அதோடு இன்னும் கூட்டம் குறையாமல் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் படையெடுப்பதால் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த அரண்மனை-4 படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏற்கனவே தான் இரண்டு பாகங்கள் இயக்கி வெளியிட்டுள்ள கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கும் பணிகளில் இறங்கி இருக்கிறார் சுந்தர். சி. அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.