தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் நடித்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. ஹிந்திக்குச் செல்வதற்கு வரை சென்னையில்தான் வசித்து வந்தார். ஹிந்தியில் பிரபலமான பின் அங்கேயே தங்கிவிட்டார். தயாரிப்பாளர் போனி கபூரையும் மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தி, மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.
ஜான்வி கபூர் அடிக்கடி திருப்பதி கோயிலுக்குச் செல்வது வழக்கம். இன்று சென்னை, தி நகரில் உள்ள பிரபலமான முப்பாத்தமன் கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். அவரது சித்தியும், முன்னாள் நடிகையுமான மகேஷ்வரியுடன் சென்றுள்ளார். இருவரும் கோயில் வாசல் முன்பு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ஜான்வி, “சென்னையில் எனது அம்மாவிற்கு மிகவும் பிடித்தமான முப்பாத்தம்மன் கோயிலுக்கு முதல் முறையாகச் சென்றேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீதேவி மறைந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. அவருக்கு சென்னையில் பிடித்த இடங்களை தனது மகள்களுக்கும் தெரிவித்துள்ளார் என்பது இதன் மூலம் தெரிகிறது.
சென்னையின் தற்போதைய மையப்பகுதியாக இருக்கும் தியாகராய நகர் ஒரு காலத்தில் விவசாயம் செய்யும் இடமாக இருந்தது. அப்போது வயல்களுக்கு மத்தியில் இருந்த அரச மரம், வேம்பு மரம் ஆகியவற்றிற்கு இடையே ஒரு புற்று உருவாகியுள்ளது. அந்த இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட அம்மன் விக்கிரகத்தை வைத்து நாளடைவில் கோயிலை கட்டியுள்ளார்கள். முப்போகமும் விளையும் இடத்தில் அம்மன் கிடைத்ததால் முப்பாத்தம்மன் என பெயர் வைத்துள்ளார்கள். 300 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ஆலயம் இது.