பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, யோகி பாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கோட். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்தில் விஜய் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அது குறித்த போஸ்டர் ஒன்றும் வெளியானது. அதோடு 25 வயது கெட்டப்பில் தோன்றும் மகன் விஜய்யின் தோற்றத்திற்காக புதிய டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டதாகவும் அது சம்பந்தமாக தான் விஜய் அமெரிக்க சென்று அது குறித்த படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது கோட் படத்தில் விஜய் மெர்சல் படத்தை போலவே 3 வேடங்களில் நடித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த மூன்றாவது வேடத்திற்காகத்தான் விஜய் அமெரிக்கா சென்றிருந்தார் என்றும் கூறுகிறார்கள். என்றாலும் அந்த மூன்றாவது விஜய்யின் வேடம் குறித்த போஸ்டர் எதையும் வெளியிடாமல் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளாராம் வெங்கட் பிரபு.