துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
கடந்த 2016ம் ஆண்டில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் ஆகியோர் நடித்து வெளிவந்த திரைப்படம் 'மெட்ரோ'. தற்போது 8 வருடங்கள் கழித்து மீண்டும் மெட்ரோ பட கூட்டணி இணைந்து 'நான் வைலன்ஸ்' என்கிற புதிய படத்தை உருவாக்கியுள்ளதாக சமீபத்தில் அறிவித்தனர்.
ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, சிரிஷ், யோகி பாபு, அதிதி பாலன் ஆகியோர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார்.
இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வை போஸ்டரை நடிகர் சிவராஜ் குமார், இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டனர். படத்தின் தலைப்போ நான் வைலன்ஸ் என்று உள்ளது. ஆனால் போஸ்டரில் உள்ளவர்கள் கையில் ஆயுதங்களுடன் இருப்பதாக உள்ளது.