ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது 'தேவாரா' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து கே. ஜி.எப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது.
இது ஜூனியர் என்டிஆரின் 31வது படமாக உருவாகிறது . இதற்கு தற்காலிகமாக 'என்டிஆர் - நீல்' என தலைப்பில் அழைக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ், என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டமாக ஆகஸ்ட் மாதத்தில் மெக்சிகோவில் தொடங்குகிறது. மேலும், இதில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.