கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் |

மேயாதமான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ரத்னம் என பல படங்களில் நடித்தவர் பிரியா பவானி சங்கர். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் திருவிளையாடல் படத்தில் தாய் தந்தையை சுற்றி வந்து விநாயகர் மாம்பழத்தை பெற்றுக்கொள்ள, உலகத்தையே சுற்றி விட்டு வரும் முருகப்பெருமாள் தனக்கு பழம் கிடைக்காமல் ஏமாற்றமடைந்து பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் காட்சியை பதிவிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர். அதன் உடன் ‛கடவுள் முருகனாகவே இருந்தாலும் வீட்டில் இரண்டாவது பிள்ளையாக பிறந்தால் இந்த நிலைதான் ஏற்படும் போல, என்னைப் போலவே இதே வேதனையை இன்னும் யாரெல்லாம் அனுபவித்துள்ளீர்கள்' என்ற ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார் பிரியா பவானி சங்கர். அவருடைய இந்த கேள்விக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பதிவிட்டுள்ளனர்.