நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
இந்தியத் திரையுலகத்தில் அதிக சம்பளம் என்றாலே அது ஹிந்தித் திரையுலகத்திற்கே போய்ச் சேரும். ஹிந்திப் படங்கள்தான் உலக அளவில் அதிகமான தியேட்டர்களில் வெளியாகின்றன. அதற்குப் பிறகு தமிழ், தெலுங்குப் படங்கள் இடம் பெறுகின்றன.
ஹிந்தியில் பல முன்னணி நடிகைகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே சில பல கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள். படத்தின் வெற்றி, தோல்வி அவர்களைப் பெரிதும் பாதிப்பதில்லை. அதனால், அவர்களது சம்பளத்தில் இறங்கு முகம் என்பதே கிடையாது.
தற்போதைய தகவல்படி இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக தீபிகா படுகோனே இருக்கிறார். மற்ற முன்னணி நடிகைகளான ஆலியா பட், கங்கனா ரணாவத், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் ஆகியோரை அவர் பின்னுக்குத் தள்ளி உள்ளார்.
பிரபல போர்ப்ஸ் பத்திரிகை, ஐஎம்டிபி-யுடன் இணைந்து நடத்திய ஆய்வில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே ஒரு படத்திற்கு 15 முதல் 30 கோடி வரை வாங்குகிறாராம். கங்கனா 15 கோடி முதல் 27 கோடி, பிரியங்கா 15 கோடி முதல் 25 கோடி, காத்ரினா கைப் 15 கோடி முதல் 25 கோடி, ஆலியா பட் 10 கோடி முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்குவதாகத் தெரிவித்துள்ளார்கள்.
தென்னிந்திய நடிகைகள் யாரும் அந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை. இருப்பினும் நாம் விசாரித்த வரையில் நடிகை நயன்தாரா தான் அதிக சம்பளம் பெறும் நடிகையாக இருக்கிறாராம். அவரது சம்பளம் 5 கோடி என்கிறார்கள்.