மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் நடிகை விஜயசாந்தி. கதாநாயகர்களுக்கு இணையாக 80, 90களில் ஆக்ஷன் கதாநாயகியாக ஜொலித்தவர். அவர் நடித்து 1990ல் வெளிவந்த 'வைஜெயந்தி ஐபிஎஸ்' படம் பற்றி இப்போதும் ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். விஜயசாந்திக்குப் பிறகு கடந்த 30 வருடங்களில் வேறு எந்த ஒரு நடிகையும் ஆக்ஷன் ஹீரோயினாக வெற்றி பெற்றதில்லை.
சினிமாவை விட்டு விலகி தீவிர அரசியலில் குதித்த விஜயசாந்தி நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2020ல் மகேஷ்பாபு நடித்து வெளிவந்த 'சரிலேரு நீக்கெவ்வரு” படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.
இந்நிலையில் பிரதீப் சிலுகுரி இயக்கத்தில் கல்யாண் ராம் கதாநாயகனாக நடித்து வரும் அவரது 21வது படத்தில் வைஜெயந்தி ஐபிஎஸ் ஆக நடிக்கிறார் விஜயசாந்தி. இன்று விஜயசாந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அறிமுக வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள். 30 வருடங்களுக்கு முன்பு எப்படி அந்தக் கதாபாத்திரத்தில் இருந்தாரோ அதே வேகத்தில் இப்போதும் நடித்துள்ளார்.