மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த 'கல்கி 2898 ஏடி' படம் நேற்று முன்தினம் வெளியானது. பேண்டஸி, சயின்ஸ் பிக்ஷன் படமாக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
திரையுலகப் பிரபலங்கள் பலரும் படத்தைப் பார்த்து பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், “கல்கி பார்த்தேன், வாவ்… என்ன ஒரு காவியம். இயக்குனர் நாக் அஷ்வின் இந்திய சினிமாவை மாறுபட்ட தளத்திற்குக் கொண்டு சென்றுவிட்டார். இரண்டாம் பாகத்திற்காக ஆவலுடன் காத்துள்ளேன்,” என்று படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார்.
அதற்கு பதிலளித்த இயக்குனர் நாக் அஷ்வின், “சார், பேச முடியவில்லை, எங்களது குழுவினர் உட்பட அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.