காதோடு தான் பேசுவேன்...! குரலுக்கு ஒரு கோபிகா | ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்த அபிஷன் ஜீவிந்த் | காமெடி நடிகராக மாறிய திரிஷ்யம் வில்லன் நடிகர் | வில்லன் நடிகருக்கு ஊக்கமளித்து பதிவிட்ட அவரது பள்ளி ஆசிரியை | 'முத்த மழை' வீடியோ வெளியான பின்பும் சர்ச்சை | நானியின் ‛தி பாரடைஸ்' படப்பிடிப்பு தாமதமாவது ஏன்? | நான் வாழ்ந்து வளர்ந்த இடத்தில் விமான விபத்து நடந்தது வேதனை அளிக்கிறது : உன்னி முகுந்தன் | தமிழுக்கு வரும் நரிவேட்ட ஹீரோயின் | கவுரவ டாக்டர் பட்டம்: அட்லிக்கு வாழ்த்து சொன்ன அல்லு அர்ஜுன் | குடியிருந்த கோயில், அவ்வை சண்முகி, போர் தொழில் - ஞாயிறு திரைப்படங்கள் |
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்து நாயகனாக நடித்த படம் நல்லதம்பி. 1949ம் ஆண்டு வெளியானது. இதன் கதை, திரைக்கதையை எழுதியவர் அண்ணாதுரை. 1936ம்ஆண்டு வெளியான 'மிஸ்டர்டீட்ஸ் கோஸ்டுடவுன்' என்கிற ஆங்கில படத்தைப் பார்த்த என்.எஸ்.கிருஷ்ணன், அதைத்தழுவி ஒருகதை எழுதித்தருமாறு அண்ணாதுரையிடம் சொல்ல அவர் எழுதிக் கொடுத்த படம்தான் 'நல்லதம்பி'. இதுதான் அண்ணாதுரைக்கு முதல் திரைப்படம். டைட்டிலில், கதை, வசனம் அண்ணாதுரை எனப் போட்டார்கள்.
படத்திற்கு சி.ஆர்.சுப்பராமன் இசை அமைத்திருக்கிறார். கிருஷ்ணன் - பஞ்சு இரட்டையர் இயக்கி, இருக்கிறார்கள். பிற்காலத்தில் 'ப' வரிசைப் படங்களை இயக்கி குவித்த பீம்சிங் இந்த படத்தில் எடிட்டராக பணியாற்றி உள்ளார்.
என்.எஸ்.கிருஷ்ணன் ஜோடியாக டி.ஏ.மதுரம் நடித்திருந்தார். பானுமதி, எஸ்.வி.சகஸ்ரநாமம், வி.கே.ராமசாமி, நாராயணசாமி, புளிமூட்டை ராமசாமி, காக்கா ராதாகிருஷ்ணன், வி.எஸ்,ராகவன், எம்.என்.ராஜம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
மக்களுக்காக சேவை செய்து வரும் ஒருவனுக்கு திடீரென ஜமீன்தாரராகும் வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வான் என்பது தான் படத்தின் கதை.