துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
2024ம் ஆண்டின் ஆறு மாதங்கள் நிறைவடைந்துவிட்டது. கடந்து போன ஆறு மாதங்களை விட இன்றிலிருந்து ஆரம்பமாகும் அடுத்த ஆறு மாதங்கள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பல முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளதே இதற்குக் காரணம்.
அடுத்த வாரம் ஜூலை 12ம் தேதி பிரம்மாண்டப் படமான 'இந்தியன் 2' படம் வெளியாக உள்ளது. அதனால் இந்த வாரம் ஜூலை 5ம் தேதியும், ஜூலை 19ம் தேதியும் மற்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக வாய்ப்பில்லை. அப்படி வெளியிட்டால் எதிர்பார்த்த அளவிற்கு வசூலைப் பெற முடியாது.
இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜூலை 5ம் தேதி 5 சிறிய படங்கள் மட்டுமே வெளியாக உள்ளது. “7ஜி, எமகாதகன், கவுண்டம்பாளையம், தேரடி, நானும் ஒரு அழகி” ஆகிய படங்கள் மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிய படங்கள் என்பதால் இவற்றில் கடைசி நேரத்தில் ஏதாவது மாற்றங்கள் வரலாம்.