மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடி பகுதியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஏ.ஆர் முருகதாஸ் திருச்செந்தூர் முருகனை தரிசிப்பதற்காக வருகை தந்தார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் நுழைவதற்கு முன்பாக ஆண்கள் தங்களது மேலாடையை கழட்டி விட்டு செல்வது வாடிக்கையான ஒன்று.
அப்படி ஏ.ஆர்.முருகதாஸ் தனது சட்டையை கழட்டும் போது அங்கிருந்த ரசிகர் ஒருவர் ஆர்வம் மிகுதியால் அதை வீடியோ எடுக்க ஆரம்பித்தார். இதனால் சங்கடமாக உணர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் அந்த ரசிகரிடம் வீடியோ எடுக்க வேண்டாம் என்று கூறினார். இருந்தாலும் அவர் தொடர்ந்து வீடியோ எடுக்க துவங்க உடன் வந்த தனது உதவியாளர்களிடம் அதை கவனித்து தடுக்குமாறு கூறினார்.
ஆனாலும் அந்த ரசிகர் முருகதாஸின் உதவியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதை தொடர்ந்து ஏற்பட்ட பரபரப்பால் பலரது கவனமும் இவர்களை நோக்கி திரும்பியது. இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. பலரும் ஏ.ஆர் முருகதாஸுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வருவதுடன், பிரபலங்களின் பிரைவசியில் எந்நேரமும் தலையிட்டு கொண்டிருக்கக் கூடாது என அந்த வீடியோ எடுத்த சம்பந்தப்பட்ட ரசிகரையும் திட்டி தீர்த்து வருகின்றனர்.