துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பூரி ஜெகன்நாத். இவர் கடைசியாக விஜய் தேவரகொண்டாவை வைத்து இயக்கிய லைகர் திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து ஐ ஸ்மார்ட் என்கிற வெற்றி படத்தை கொடுத்திருந்த பூரி ஜெகன்நாத் அதன் இரண்டாம் பாகமாக டபுள் ஐ ஸ்மார்ட் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக காவ்யா தாபர் நடிக்க, முக்கிய வேடத்தில் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் இடம் பெற்ற ஸ்டெப்பமார் என்கிற முதல் பாடல் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாவது பாடலாக மார் முந்தா சோட் சிந்தா என்கிற பாடல் வெளியானது. ஆனால் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் தெலுங்கானாவின் பிரதான கட்சிகளில் ஒன்றான ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் அடிக்கடி பேசும் ஒரு முக்கிய வசனத்தை கிண்டல் அடிக்கும் விதமாக இடம் பெற்றுள்ளதாக தற்போது ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து அந்த கட்சியைச் சேர்ந்த தலைவர் ரஜிதா ரெட்டி என்பவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் மற்றும் படக்குழுவினருக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார்.