துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மலையாள சினிமாவின் தனிப்பெரும் ஆளுமையாக இப்போதும் போற்றப்படுகிறவர் பிரேம் நசீர். 610 படங்களில் ஹீரோவாக நடித்து சாதனை படைத்தவர். இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. 1952ம் ஆண்டு 'மருமகள்' என்ற படத்தின் மூலம் அறிமுகமான பிரேம் நசீர், தமிழில் 34 படங்களில் நடித்துள்ளார். 1979ம் ஆண்டு 39 படங்களில் நடித்து சாதனை படைத்தார். இன்னொரு சாதனை என்ன தெரியுமா? 35 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
அவர் உச்சத்தில் இருந்தபோது ஒரு நாளைக்கு மூன்று கால்ஷீட்கள் கொடுத்து 16 மணி நேரம் தொடர்ச்சியாக நடித்தார். ஒரு நாளில் 3 படங்களில் நடித்தாலும் அந்த 3 படத்தின் கேரக்டரையும் மனதில் வைத்து எந்த ஒத்திகையும் இல்லாமல் நடித்து விடுவாராம். ஒரு படம் தோல்வி அடைந்து அந்த தயாரிப்பாளர் நஷ்டமடைந்து விட்டால் அதே தயாரிப்பாளருக்கு இன்னொரு படம் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுப்பது பிரேம் நசிர் ஸ்டைல். அதனால்தான் அவரால் 600 படங்களுக்கு மேல் நடித்து சரித்திரத்தில் இடம் பிடிக்க முடிந்தது.