‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' | 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதை நாயகனாக நடிக்கும் மிஷ்கின் | ஹீரோவானார் பிக்பாஸ் விக்ரமன் |

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள அவரது 50வது படமான 'ராயன்' வருகின்ற ஜூலை 26ந் தேதி திரைக்கு வருகிறது. அவருடன் துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ்ராஜ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி தீவிரமாய் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ் பேசும் போது, " தனுஷ் புதிதாக என்னிடம் ஒரு கதையை கூறினார் அந்த கதையை தனுஷ் இயக்கவுள்ளார் அதில் முதன்மைத் கதாபாத்திரத்தில் என்னுடன் இணைந்து நித்யா மேனன் நடிக்கவுள்ளார் என பகிர்ந்துள்ளார் ".
இப்போது சமூக வலைதளங்களில் இந்த செய்தி வைரலாகி வருகிறது.